Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 09 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைக்கு அடிமையாகிய இளைஞனுக்கு மறுவாழ்வு
ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகிய 22 வயது இளைஞனை பொலனறுவை கந்தகாடு மறுவாழ்வு நிலையத்தில் அனுமதித்து ஒரு ஆண்டு மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் நேற்று (08) உத்தரவிட்டார்.
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் குருநகரைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்
குறித்த சந்தேகநபரை பொலிசார் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் முன்னிலையில் நேற்று (08) முற்படுத்தினார்கள். அதன் போது அவரது தாயாரும் மன்றில் முன்னிலையானார்.
விசாரணைகளின் போது தயார் “மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டார். அதனால் என்னை மிரட்டிப் பணம் பறிக்கின்றார். வீட்டில் பணம் திருடிச் சென்று போதைப்பொருளை பாவிக்குமளவுக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். எனவே என மகனை எவ்வளவு காலம் சென்றாலும் நல்வழிப்படுத்தித் தாருங்கள்” என்று இளைஞனின் தாயார் மன்றிடம் வேண்டினார்.
தாயாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனிசாமி பீற்றர் போல் இளைஞனை எதிர்வரும் ஒரு ஆண்டுக்கு பொலனறுவை கந்தகாடு மறுவாழ்வு நிலையத்தில் தடுத்துவைத்து மறுவாழ்வு வழங்குமாறு உத்தரவிட்டார்.
இளைஞனின் மறுவாழ்வு நிறைவடையும்வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பொலனறுவை வெலிக்கந்தை கந்தகாடு மறுவாழ்வு முகாமில் போதைப்பொருளுக்கு அடிமையாகிவர்களுக்கு மறுவாழ்வு வழங்கப்படுகிறது. இத்தகைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 17 வயது மாணவனையும் ஒரு ஆண்டுக்கு மறுவாழ்வு வழங்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025