Freelancer / 2023 ஒக்டோபர் 24 , பி.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
போதையில் பேருந்தினை செலுத்திய இலங்கை போக்குவரத்து சபை சாரதி ஒருவரின் சாரதி அனுமதி பாத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை ஊர்காவற்துறை பொலிஸார் மறித்து சோதனையிட்ட போது , சாரதி போதையில் இருந்ததை கண்டறிந்தனர்.
அதனை அடுத்து சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் திங்கட்கிழமை பொலிஸார் முற்படுத்திய போது , சாரதி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.
அதனை அடுத்து , அவரது சாரதி அனுமதி பத்திரத்தை ஒருவருட காலத்திற்கு மன்று இரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. R
20 minute ago
32 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
37 minute ago
45 minute ago