Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 10 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், டி.விஜிதா
போலி 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை விநியோகிக்க முற்பட்ட 2 இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (10) அதிகாலை தென்மராட்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
போலி 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை யாழ்ப்பாண பகுதியில் விநியோகிப்பதற்கு ஒப்பந்தம் பேசப்படுவதாக மாவட்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் துரிதமாக விசாரணைகளை முன்னெடுத்து குறித்த போலி நாணயத்தாள் விநியோகஸ்தர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது; திருகோணமலையிலிருந்து யாழ்நோக்கி பஸ்ஸில் வந்த போலி நாணயத்தாள் விநியோகஸ்த்தர்கள் இருவரும் கொடிகாமம் பகுதியில் இறங்கி டிப்பர் வாகனம் ஒன்றில் ஏறி கைதடிப்பகுதிக்கு சென்று நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்டபோது சாவகச்சேரி பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களையும் கையும்மெய்யுமாக கைதுசெய்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 20 போலி 5ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக ஒரு இலட்சம் போலி நாணயத்தாள்களை ரூபாய் 30 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக உப பொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் 25, 26 வயதுடைய இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025