2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போலி நாணயத்தாள்கள், கஞ்சா பீடிகளை வைத்திருந்த இளைஞர்கள் கைது

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 06 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி நாணயத்தாள்கள், கஞ்சா பீடிகளை உடமையில் வைத்திருந்த மூன்று இளைஞர்களை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று (05) கைது செய்துள்ளனர்.

வல்வெட்டித்துறை பகுதியில் 1000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டை தமது உடமையில் வைத்திருந்தார் என ஒருவரையும், கஞ்சா பீடியினை நுகர்ந்தார்கள் எனும் குற்றசாட்டில் இரு இளைஞர்களையும் வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று (05) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கரணவாய் மற்றும் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X