Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 மார்ச் 25 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், அச்சுவேலிப் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரைப் படுகொலை செய்தும் மேலும் இருவரை கொலை செய்ய முயற்சித்தார் என குற்றம்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபர், சிறைச்சாலையில் இருந்து, அலைபேசி ஊடாக சாட்சியங்களை அச்சுறுத்தியமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.
2014ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி, அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரின் மனைவியின் தாயான நித்தியானந்தன் அருள்நாயகி, மனைவியின் தம்பியான நித்தியானந்தன் சுபாங்கன் மற்றும் மனைவியின் சகோதரியான யசோதரன் மதுஷா ஆகியோரை படுகொலை செய்த குற்றச்சாட்டிலும், மனைவியான தர்மிகா மற்றும் மனைவியின் சகோதரியின் கணவனான யசோதரன் ஆகியோரை படுகொலை செய்யும் நோக்குடன், வெட்டிக் காயப்படுத்திய குற்றசாட்டில் பென்னம்பலம் தனஞ்செயன் எனும் நபர் கைதுசெய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறைச்சாலையில் இருந்து தனஞ்செயன் சாட்சியங்களை அலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு மிரட்டியுள்ளார்.
அது தொடர்பில் சாட்சியங்களால், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் அச்சுவேலிப் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, சாட்சியங்களை அச்சுறுத்தியமை தொடர்பிலான முறைப்பாட்டின் பிரகாரம், அச்சுவேலி பொலிஸார் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் அது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சிறைச்சாலையில் எவ்வாறு தடைசெய்யப்பட்ட பொருட்கள் உட்கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பிலும், விசாரணைகளை சிறைச்சாலை அத்தியட்சகர் முன்னெடுத்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும், குறித்த அலைபேசி எவ்வளவு காலம் சிறைச்சாலைக்குள் வைத்து பாவிக்கப்பட்டது என்பது தொடர்பிலும், குறித்த அலைபேசியிலிருந்து உட்சென்ற மற்றும் வெளிச்சென்ற அழைப்புக்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து குறித்த வழக்கினை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அதுவரையில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அதேவேளை, முக்கொலை வழக்கு விசாரணை, யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago