2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

முகாம் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

Niroshini   / 2016 மார்ச் 04 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள 38 நலன்புரிமுகாம்களில் வசித்து வருகின்ற பொதுமக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (04) முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஒவ்வொரு முகாமிலும் ஒரு கிழமை என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டமானது, முதலில் சுன்னாகம் கண்ணகி முகாமில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

தாங்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் முடிவிலும், தங்கள் சொந்த நிலங்களுக்கு போக முடியாமல் போனால், தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெள்ளைக் கொடிகளுடன் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் தங்கள் காணிகளுக்குச் செல்வோம் என முகாம் மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதற்கு முன்னர் தங்கள் குடும்ப அட்டைகளை மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைத்து விட்டு செல்வோம் என்றனர்.

இந்தப் போராட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன், வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுத்தலைவர் எஸ்.சஜீவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X