2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

முகவரி காட்டியவரிடம் நகை பறிப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன்

முதியவரிடம் வீடொன்றின் முகவரி கேட்டு வந்தவர்கள் முதியவர் அணிந்திருந்த 3 பவுண் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவமொன்று ஆனைப்பந்தி பகுதியில் திங்கட்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.

முதியவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வாசலில் நின்றபடி, இந்த முகவரி எங்குள்ளது எனக்கேட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் சொல்வதற்காக முதியவர்கள் அருகில் சென்ற வேளையிலேயே, முதியவர் அணிந்திருந்த 3 பவுண் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, முதியவர் கூக்குரலிடவே அங்கு நின்ற முச்சக்கரவண்டி சாரதியொருவர் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை குறித்து எடுத்துக்கொண்டார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X