Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 நவம்பர் 11 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
தேசிய வீடமைப்பு அதிகார சபை, மேசன் தொழிற் பயிற்சியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, சீருடைகள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு உபகரணங்களை வழங்குவதற்கான சகல ஒழுங்குகளையும் மேற்கொண்டுள்ளது.
யுத்தத்துக்கு பின்னர், நாட்டில் கட்டுமானப் பணிகள் தற்போது அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தும், பயிற்றப்பட்ட தகுதியுடைய மேசன் தொழிலாளர்களின் எண்ணிக்கை தேவைக்கேற்றவாறு இல்லாததால், கட்டட வேலைகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனைச் சீர்செய்யும் நோக்கில், தேசிய வீடமைப்பு அதிகார சபையானது மேசன் தொழிலாளர்களுக்கான மூன்று மாத காலப் பயிற்சியை வழங்கி வருகின்றது.
இப்பயிற்சி நெறியானது கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இந்த தொழிற்பயிற்சி நெறியில் யாழ்.மாவட்டத்தில் 150 பேர் இணைந்து பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் ஊக்குவிப்புப் பணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனைவிட, தொழிலாளர்களின் நலன்கருதி சீருடைகள் உட்பட 8 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு உபகரணங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
29 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
4 hours ago