2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மாட்டுடன் மோதுண்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 மே 25 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் கடந்த 15ஆம் திகதி மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராதனை பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற, கொழும்பு மொறட்டுவையை சேர்ந்த வைத்திலிங்கம் கனகரட்ணம் (70 வயது) என்பவரே உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 15ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சிக்கு சென்றுகொண்டிருந்த போது, இயக்கச்சிப் பகுதியில் வீதியின் குறுக்காகச் சென்ற மாட்டுடன் மோதுண்டு படுகாயமடைந்தார். 

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X