2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மேட்டுப்பயிர்ச் செய்கை செய்ய குழாய்க் கிணறுகள் வேண்டும்

Gavitha   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி ஜெயபுரம் கிராமத்தில் மேட்டுப் பயிர்ச் செய்கையில் ஈடுபடக்கூடிய வகையில் குழாய்க் கிணறுகளை அமைத்துத்தருமாறு ஜெயபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம் பூநகரிப் பிரதேச செயலரிடம் மனுவொன்றை கையளித்துள்ளது.
1983ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜெயபுரம் கிராமத்தில் தற்போது 450 வரையான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இக்குடும்பங்களுக்கென ஒதுக்கப்பட்ட 526 ஏக்கர் வயல் நிலம் இதுவரை பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இக்கிராம மக்கள் மேட்டுப் பயிர்ச்செய்கையில் ஈடுபடக்கூடிய வகையில் குழாய்க் கிணறுகளை அமைத்துத்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X