2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

முட்டையும் இறைச்சியும் விலையேற்றம்

Niroshini   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையானது சடுதியாக அதிகரித்துள்ளது.

ஒரு முட்டை 20 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கோழி இறைச்சி கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கோழி இறைச்சியின் கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் 480 ரூபாய் என நிர்ணயித்திருந்த நிலையிலும், யாழ்ப்பாணத்தில் இறைச்சி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 வாரங்களாக அதிகரித்து இருந்த வெப்பத்தால் முட்டையிடும் வீதம் வீழ்ச்சியடைந்தமையால், முட்டையில் விலையானது அதிகரித்துள்ளது எனவும் கோழி இறைச்சி உற்பத்தி வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X