Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 02 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றிலிருந்து, 60 மில்லிமீற்றர் ரக இரண்டு மோட்டார் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த காணியின் உரிமையாளர், செவ்வாய்க்கிழமையன்று (01) அக்காணியைத் துப்பரவு செய்யும் போதே, மண்ணில் புதையுண்டிருந்த மேற்படி குண்டுகளை அவதானித்துள்ளார்.
இது தொடர்பில், சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டடை அடுத்து, பொலிஸார் இது தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுசென்ற நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் விசோட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் இந்த குண்டுகள் மீட்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago