2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மாணவி உயிரிழப்பு: மக்கள் போராட்டம்

George   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுந்தீவு வைத்தியசாலையில் போதிய வைத்திய வசதிகள் இல்லாமையால் உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கூறி, நெடுந்தீவு மக்கள் வியாழக்கிழமை (13) போராட்டம் செய்ததுடன், நெடுந்தீவு பிரதேச செயலாளரிடம் மகஜரும் கையளித்துள்ளனர்.

ர.டிலாஜினி (வயது 18) எனும் மாணவி திடீர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அங்கு போதிய சிகிச்சை இல்லாமையல் உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் கூறினர்.

நெடுந்தீவின் வைத்தியசாலை தரம் போதாமை மற்றும் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக இந்த உயிரிழப்பு இடம்பெற்றதாக கூறினர். 4,500 மக்கள் உள்ள நெடுந்தீவில் 1 வைத்தியர் மாத்திரம் இருப்பதாக அவர்கள் கூறினர்.

வைத்திய சேவைகளை அபிவிருத்தி செய்ய கோரியும், பிரதேச வைத்தியசாலையாக உள்ள நெடுந்தீவு வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் எனக்கோரி இந்த போராட்டத்தை மக்கள் முன்னெடுத்தனர்.
(புகைப்படஉதவி - தீபன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X