Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மே 12 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
புங்குடுதீவு மாணவி சிவலோகநாத் வித்தியா படுகொலை வழக்கை, கொழும்புக்கு மாற்றுவதைக் கண்டித்து புங்குடுதீவு மக்கள் நேற்று வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த வழக்கை கொழும்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் 'ட்ரயல் அட்பார்' முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் குறித்த வழக்கு 'ட்ரயல் அட்பார்' முறையில் யாழ்ப்பாணத்திலேயே இடம்பெற வேண்டும் என தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமக்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் ஜனாதிபதி, பிரதம நீதியரசர் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மாணவி வித்யா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி, கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 10 ஆம் சந்தேக நபரான ஜெயவர்த்தன மற்றும் 12 ஆம் சந்தேகநபரான ரவீந்திரன் ஆகிய இருவருக்கும் எதிராக சாட்சியங்கள் எவையும் இல்லாத காரணத்தால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய, கடந்த மாதம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தால் இவ்விருவரும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாளை சனிக்கிழமையுடன் (13) இக்கொலைச்சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago