Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பாடசாலையில் இருந்து அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற மாணவன், வீடு திரும்பவில்லை என, அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில், அம்மாணவனின் பெற்றோர், ஞாயிற்றுக்கிழமை (23) முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆவரங்கால், புத்தகலட்டி விஷ்ணு வித்தியாலயத்தில், தரம் 11இல் கல்வி கற்கும் சிரஞ்சீவி மதுசாந்தன் (வயது17) என்ற மாணவனே, இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (20), பாடசாலை சீருடை அணிந்துகொண்டு குறித்த மாணவன் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
எனினும், அம்மாணவன், பாடசாலை சீருடையின்றி வேறு ஆடையுடனேயே பாடசாலைக்கு வந்ததாகவும், அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதி தருமாறு கோரியதற்கு இணங்க, தான் அனுமதி அளித்ததாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த மாணவன் இதுவரை வீடு திரும்பவில்லை. இச்சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள சிறு குற்றத்தடுப்பு பொலிஸார், குறித்த மாணவன் தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago