2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மாணவனுக்கு அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியர்களுக்கு பிணை

Niroshini   / 2016 ஜூலை 06 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பாடசாலை மாணவனுக்கு வைத்தியசாலையில் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் சாவகச்சேரி பொலிஸாரினால் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு ஆசிரியர்களும் தலா 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் செவ்வாய்க்கிழமை (05) அனுமதியளித்தார்.

அத்துடன், எதிர்வரும் 12ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தார்.

12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்குமாறு கோரி சட்டத்தரணிகள் இருவர் மன்றில் பிணை விண்ணப்பம் செய்திருந்தனர். இரு சட்டத்தரணிகளின் வாதப்பிரதிவாதங்களை ஏற்றுக்கொண்ட நீதவான் அவர்களை பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

சாவகச்சேரி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த மாதம் 15ஆம் திகதி மாணவன் ஒருவருக்கு ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததில்  அம் மாணவனின் செவிப்பறை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

வழக்கு விசாரணை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில் அப் பாடசாலையின் ஆசிரியர்கள் இருவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டது.

மாணவன் சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவித்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X