Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 10 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
இலங்கையின் இவ்வருடத்துக்கான மொத்த தேசிய வெங்காய உற்பத்தியின் 60 சதவீதத்தை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கிருஸ்ணன் ஸ்ரீ பாலசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போட்டி சந்தையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலைக்கு முகம் கொடுக்கும் வகையில், உற்பத்தி செலவை குறைத்தல், உற்பத்தி விலைத் தளம்பலை குறைத்தல், தொடர்ச்சியாக வெங்காய உற்பத்தி மேற்கொள்ளல், உண்மை விதையை உற்பத்தி செய்தல் போன்ற இந்த நான்கு திட்டங்கள் மூலம் வெங்காய உற்பத்தியின் எதிர்காலத்தை யாழ்ப்பாணத்தில் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'சந்தையில் உச்ச விலையில் விற்பனை செய்யப்படும் வெங்காயத்தை, நுகர்வோர் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளமுடியும். இதனால் பயிர்ச்செலவு குறைவதுடன், உற்பத்தியால் பெறப்படும் இலாபத்தை விவசாயிகளால் அதிகரித்துக்கொள்ள முடியும். மேலும், சாதகமற்ற காலநிலையில் யாழ்ப்பாணத்தின் கடல்நீரேரியை அண்டிய பகுதிகளான புங்குடுதீவு, அனலைதீவு, வல்லை, கப்பூது யாக்கரு, குடத்தனை பகுதிகளில், கடல் நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்கும் விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது' என்று அவர் கூறினார்.
அதற்காக கடல் நீரேரியை நம்பி வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு, விதை வெங்காயம் வழங்கப்படும். இதனால் யாழ். மாவட்டத்தின் குறித்த பகுதிகளிலிருந்து 1,000 ஏக்கர் வெங்காயத்தை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அவர் கூறினார்.
'தற்போது யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதிகளில் குமிழ் வெங்காய விதைகள் மூலமே வெங்காயம் பயிரிடப்படுகிறது. இதற்கு பதிலாக உண்மை விதைகளை நாட்டி அவற்றை மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் குமிழ் விதைகளின் 75 வீத செலவை குறைப்பதுடன் போட்டி சந்தையில் வெங்காயத்தை நல்ல விலைக்கு விற்கவும் முடியும்' என்றும் அவர் கூறினார்.
இதற்காக உண்மை விதை உற்பத்தி செய்யும் திட்டம் இலங்கையில், யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றது.
விவசாயிகளிடம் உண்மை விதை உற்பத்தியினை மேலும் ஊக்குவிப்பதன் மூலம் இவ்வருடம் நுகர்ச்சியின் மூலம் தேசிய வெங்காயத்தின் 60 சதவீதத்தை யாழ். மாவட்டத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என மாகாண விவசாய் பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
39 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
4 hours ago