2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மாதாந்த ஒன்றுகூடல்

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

சர்வோதயத்தின் ஓர் அங்கமான தேசிய தேசோதய சபையின் மாதாந்த ஒன்றுகூடல் கண்டி வீதியில் அமைந்துள்ள சர்வதோய மண்டபத்தில், எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு, கலாநிதி நா.தனேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, யாழ். மாவட்ட சர்வோதயத்தின் அமைப்பாளர் கி.யூகேந்திரா, தேசோதய சபையின் கொள்கைகள் பற்றி விளக்கமளிக்கவுள்ளார்.

இந்த ஒன்றுகூடலில், உறுப்பினர்கள் தங்கள் பிரதேசங்களின் காணப்படும் பிரச்சினைகளை எழுத்து மூலமாக கையளிக்கலாம்.

இதன்போது, பிரச்சினைகளுக்கு பிரதேச, நகர, மாநகர மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்வு பெற்றுக்கொடுத்தல், சர்வோதயத் தலைவர் டொக்டர் ஆரியரட்ணா மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி, யாழ். மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெறும் நடவடிக்கையில் ஈடுபடுதல், யாழ். மாவட்ட உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுதல் போன்ற விடயங்கள் தீர்மானிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X