2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மின்கம்பம் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

George   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழில் தற்போது நிலவும் காற்றுடன் கூடிய மழை காரணமாகஇ அச்சுவேலி தொண்டமனாறு பிரதான வீதியில் பிரதான மின்கம்பங்கள் இரண்டு சரிந்து வீழந்துள்ளன.

இதனால்இ யாழ்ப்பாணம் பருத்தித்துறை 751 மார்க்க வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அனைத்து வாகனங்களும் மாற்றுவழியூடாக பயணிக்கின்றன.

குளிர்காற்றுடன் கூடிய மினிசூறாவளிஇ தொண்டமானாறு பகுதியினை தாக்கியுள்ளது. இதனால் இரண்டு மின்கம்பங்கள் வீதியின் குறுக்கே சரிந்து வீழந்துள்ளன. இது தொடர்பில் மின்சார சபை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X