2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மின்சாரம் தாக்கி சமுர்த்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 மே 01 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுதுமலை, அம்மன் கோயில் பகுதியில் நேற்று சனிக்கிழமை (30) இரவு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், உடுவில் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் நாகையா செந்தூர்செல்வன் (வயது 44) எனப் பொலிஸார் கூறினர்.

நீர் இறைக்கும் இயந்திரத்தின் ஆழியினை போடும் போது திடீரென ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக இவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சடலம், பிரதே பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X