2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

முன்னாள் போராளிகளுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கவும்

Gavitha   / 2016 நவம்பர் 08 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிகை விடுத்து,  வடமாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன், பிரேரணை ஒன்றினை முன் மொழிந்துள்ளார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்றது. இதன் போதே குறித்த பிரேரணையை ஆளும் கட்சி உறுப்பினர் முன்மொழிந்தார்.

பிரேரனையை முன் மொழிந்து கருத்து தெரிவிக்கையில், விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த 12 ஆயிரம் பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தமது வாழ்வாதரத்துக்காக கஷ்டப்படுகின்றார்கள். எனவே, அவர்களுக்கு நிரந்த வருமானம் கிடைக்க கூடிய வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என ஜனாதிபதியை கோருவதாக அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X