2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

முன்னாள் போராளிகள் கைது தொடர்பில் கூட்டமைப்பு ஏன் மௌனம்?

George   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், பயங்கரவாத விசாரணைப் பிரிவால் மீண்டும் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்து வருகின்றது? என புரியவில்லை' என்று அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இராணுவ முகாமுக்குள் சென்றது தொடர்பில் விளக்கமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் கைதிகள் கைது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. 

ஒரு நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் எந்த இடத்துக்கும் போகக்கூடிய வகையில் இருக்கையில் அது பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை' என்றார்.

'நல்லாட்சி அரசாங்கம் உருவாகுவதற்கு தமிழ் மக்களின் பங்கு முக்கியமானது. அந்தவகையில் முன்னாள் போராளிகளை கைது செய்வதை தடுப்பதற்கு, நல்லாட்சி அரசாங்கத்துடன் கூட்டமைப்பு கதைக்க வேண்டும்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X