2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

முன்னாள் போராளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Gavitha   / 2016 மே 12 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

தலைச்சுற்று ஏற்பட்டு கீழே விழுந்ததில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி புதன்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரந்தன் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் விக்னேஸ்வரன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் கடந்த 14 வருடங்களாக இருந்த இவருக்கு கடந்த 06ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தலைச்சுற்று காரணமாக, தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்;ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், மரண விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் கையளித்தார்.

2 பிள்ளைகளின் தந்தையான இவருடைய தலையில், ஷெல் சன்னம் இருந்துள்ளது. தலை வலியால் அவதிப்பட்டு வந்த இவர், அடிக்கடி தலையை சுவரில் இடித்துக்கொள்வார் என்று அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X