2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மீன்பிடித்துறை அபிவிருத்திக் கருத்திட்ட பயிற்சிப்பட்டறை

Kogilavani   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண நிலைத்தகு மீன்பிடித்துறை அபிவிருத்திக் கருத்திட்ட பயிற்சிப்பட்டறை, யாழ்.பொதுநூலக கேட்போர்; கூடத்தில், நேற்று வியாழக்கிழமை (01) இடம்பெற்றது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்நிர்மாணம், மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை இணைந்து இக்கருத்தாடலை ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர்; சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டதுடன், யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன், கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் வடமாகாண பிரதம செயலாளர்; பத்திநாதன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் அபிவிருத்தி நிருபர்; மஞ்சுளா அமரவீர உள்ளிட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகத்தர்;கள் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த கருத்தாடலில், வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் துறைமுக அபிவிருத்திகள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி நிலமைகளை மாற்றுதல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், உள்ளிட்ட கடல்வளங்களைப் பாதுகாத்தல் குறித்தும், மீன்பிடி அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான தடைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதுடன், அதிகாரிகளுக்கும் விளக்க படங்கள் மூலம் விளக்கமளிக்கப்பட்டது.

இவ் அபிவிருத்தி திட்டம் கடந்த ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவுக்குக் கொண்டு வரும் கருத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதில் முக்கியமாக மீன்பிடித்துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, குருநகர், மன்னார்; பேசாலை துறைமுகங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

நங்கூரமிடும் இடங்களும் கரைசேரும் தளங்களை புனரமைத்தல், நவீனமயப்படுத்தல், கடல் நீரியல் வளம் வாழ்வாதாரத்துடன் தொடர்;புடையதாக கடல் நீரியல்வளத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள், உள்ளிட்ட சந்தைத் தொடர்;புகள் மற்றும் மீனவர்;களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துதல், கடனுதவிகளை வழங்குதல் மற்றும் முயற்சியான்மைத் திறன்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல், கரையோர மற்றும் மீன்பிடிவள முகாமைத்துவத்தில் வடமாகாண மீனவர்களின் நிலைத்தகு வாழ்வாதாரத்துக்;கு மீன்பிடிவளம் மற்றும் கரையோர முகாமைத்துவ மேம்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதில் ஆராயப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X