2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்: சந்தேக நபரை தொடர்ந்து விசாரிக்க அனுமதி

George   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

பளை பகுதியில் உள்ள தனது வீட்டில்  வைத்து சிறுமிகள் மூவரை  துஷ்பிரயோகம் செய்த  குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட  சந்தேக நபரை  தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், சந்தேகநரின் விளக்கமறியலை எதிர்வரும் 5ஆம் திகதிவரை நீடிப்பதாகவும் கிளிநொச்சி  நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தனது வீட்டில்  வைத்து சிறுமிகள் மூவரை  துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் சந்தேக நபர்,  பளைப் பொலிஸாரால் கடந்த 8ஆம் திகதி திகதி  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அதன்போது, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன். நீதிமன்ற பதிவாளர் , பொலிஸார் , சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் கொண்ட குழுவினர், நீதிமன்றின் பணிப்பையடுத்து,  சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று  சான்றுப் பொருட்களை கைப்பற்றினர்.

பின்னர் இந்த வழங்கு 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 24ஆம் திகதிவரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள,  குற்றப் புலனாய்வு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், சந்தேக நபரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த  கண்காணிப்பு  கருவிகள்,  பொலிஸாரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்நிலையில், பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய ​தொடர்ந்து தடுத்துவைத்து விசாரணைகளை​மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X