Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜூலை 14 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சின் ஊடாக, மீனவர்;களுக்கு 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான காப்புறுதி திட்டத்தை பெற்றுகொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, யாழ் மாவட்டத்தில் உள்ள 14 மீன்பிடி பரிசோதகர் பிரிவில் உள்ள 21,000 மீனவ குடும்பங்கள், தமது பதிவுகளை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பதிவுகள் அனைத்தும் இம் மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்;கள் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான காப்புறுதியை இழக்க நேரிடும் என அவர்; அறிவுறுத்தியுள்ளார்.
'திடிர் விபத்து, சொத்து அழிவு, கடற்கலம் காணாமல் போதல் போன்ற சம்பவங்களினால் கடந்த காலங்களில் பல மீனவர்;கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்திருந்தனர்;. தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக மீனவர்;களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக 1 மில்லியன் ரூபாய் காப்புறுதி வழங்கப்படவுள்ளது' எனவும் அவர் கூறினார்.
இது தொடர்;பில் அந்த பகுதிகளுக்குரிய சங்கங்கள், மற்றும் சமாசங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கங்கள் ஊடாக பதிவை மேற்கொள்ள முடியாதவர்கள் அவர்களின் பகுதிக்குரிய மீன்பிடி பரிசோதகர்; மூலம் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
இப்பதிவுகளைக் கொண்டே இனிவரும் காலங்களில் படகுகள், வலைகள் போன்ற கடற்றொழில் உபகரணங்களை வழங்குவதற்கு மீன்பிடி அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக உதவிபணிப்பாளர் மேலும் கூறினார்.
55 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago