2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள் திறப்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்;தாக் கல்லூரியில், அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், வீட்டுக்கு வீடு கிராமத்துக்கு கிராம் எனும் தொனிப்பொருளில், 15 ஆயிரம் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தால் அமைக்கப்பட்ட இரு வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள் செவ்வாய்க்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் முதல் நிலைப்பாடசாலையாக காணப்படும் கிளி.முருகானந்தா கல்லூரியானது, பல பௌதீக வளக்குறைபாடுகளுடன் இயங்கி வருகின்றது.

இந்நிலையில், ஊரியான் கிராமத்துக்கு கிடைக்கப்பெற்ற வேலைத்திட்டத்தில், கிளி.முருகானந்தாக் கல்லூரியின் இரு வகுப்பறைகளைக் கொண்ட 40 அடி நீளமான நிரந்தரக்கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டது.

கல்லூரியின் அதிபர் தி.வரதனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கண்டாவளை பிரதேசச் செயலர் த.முகுந்தன், கண்டாவளை கோட்டக்கல்வி அதிகாரி வீ.இராஜகுலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு இரு வகுப்பறைத் தொகுதிகளையும் திறந்து வைத்தனர்.

நிகழ்வில் ஊரியான் முரசுமோட்டை பிரதேச கிராம அலுவலர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .