2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

முறிகண்டி விபத்தில் இளைஞன் பலி

Princiya Dixci   / 2016 மார்ச் 30 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என். நிபோஜன் 

கிளிநொச்சி, முறிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த எஸ்.கலைச்செல்வன் (வயது 26) என்ற இளைஞன் பலியாகினார்.

சில்லு மாற்றுவதற்காக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கனகர வாகனத்துடன், வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதில் படுகாயமடைந்த இளைஞர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது இடைநடுவில் உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X