2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவு பஸ் நிலையம் அடுத்த வருடம் அமைக்கப்படும்

George   / 2016 ஜூலை 23 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

'முல்லைத்தீவு பஸ் நிலையம் 2017ஆம் ஆண்டில்தான் அமைக்கப்படும்' என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தற்போதுள்ள தற்காலிக பஸ் நிலையம் அடிப்படை வசதிகளற்றுக் காணப்படும் நிலையில் முல்லைத்தீவு பஸ் நிலையம் அமைக்கப்படுவது தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளோம். 2017ஆம் ஆண்டுதான் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பஸ் நிலையம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனக் கூறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி போன்ற பல மாவட்டங்களுக்கு இவ்வாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் காரணமாக அடுத்தாண்டுதான் எமது மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்து' என தெரிவித்தார்;.

முல்லைத்தீவு தற்காலிக பஸ் நிலையம் மாவட்டச் செயலகத்துக்கு அருகில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் இயங்கிவருகின்றது. மழை காலத்தில் இப்பகுதி சேறும் சகதியுமாக காணப்படும் நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக ஆராயப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X