2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் உழவர் விழா

Niroshini   / 2016 ஜனவரி 24 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்,ரஸீன் ரஸ்மின்

வடமாகாண விவசாய அமைச்சின் 2016ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் சனிக்கிழமை(23) இடம்பெற்றது.

வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இப்பெருவிழாவில், பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றம் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாவட்ட ரீதியாக 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையாளர்களும் சேதனப் பயிர்ச் செய்கையாளர்களும் கால்நடைப் பண்ணையாளர்களும் கோழிப் பண்ணையாளர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X