2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மூளைக்காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு

Niroshini   / 2016 மார்ச் 26 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மூளைக்காய்சலினால் பாதிக்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த  மாணவன், நேற்று வெள்ளிக்கிழமை (25) சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இடைக்காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் தர்சிகன் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி இரவு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக அவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வெள்ளிக்கிழமை (25) அதிகாலை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதே சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X