2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மீள்குடியேறிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வேண்டும்

Niroshini   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வலிகாமம் வடக்கில் அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மீண்டும் அமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார் தெரிவித்தார்.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில், செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

பளைவீமன்காமம் பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முற்றாகச் சேதமடைந்துள்ளது. அதனை அந்த இடத்தில் புதிதாக அமைப்பதற்கு 50 மில்லியன் ரூபாய் தேவையென மதிப்பீடு செய்து, நிதி கோரியுள்ளோம் என்றார்.

'அதேபோல், சேதமடைந்துள்ள பலாலி ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மீள அமைக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X