2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மீள்குடியேறிய மக்களுக்கு சட்ட உதவி ஆலோசனை

Niroshini   / 2016 ஜனவரி 25 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வளலாய் வடக்கில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கான சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி திட்டம், வளலாய் வடக்கு கேட்போர் கூடத்தில், திங்கட்கிழமை (25) இடம்பெற்றது.

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில், புதிதாக மீள்குடியேறிய மக்களுக்கு குடும்ப வன்முறை, தாபரிப்பு, விவாகரத்து, காணி தொடர்பான இலவச சட்ட ஆலோசனைகள் மற்றும் பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ்களின் அவசியம் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.

கிராமத்தில் இடம்பெறும் சிறு பிரச்சினைகளுக்கு நீதிமன்றின் ஊடாக எவ்வாறு தீர்வினை பெறலாம் என்பது தொடர்பாக சட்டத்தரணியால் விளக்கமளிக்கப்பட்டது.

கிராமங்களில் சட்டம் தொடர்பில் விளங்கங்கள் மக்களை சென்றடையும் பட்சத்தில் எதிர்காலத்தில் வன்முறையற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்கமுடியும் என சட்ட உதவி ஆணைக்குழுவின் திட்ட உத்தியோகத்தர் ஆ.கோகுலன் தெரிவித்தார்.

கிராம மட்ட அமைப்புக்கள் ஊடாக இவ்வாறு தெளிவூட்டும் செயற்பாடுகள் ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவில் தொடர்ந்து நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலக திறன்விருத்தி உத்தியோகத்தர் பிரியாவதி சசிகுமார் கலந்து கொண்டு மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X