2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மீள்குடியேறிய மக்களுக்கும் மின்சாரம் வேண்டும்

Niroshini   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
வடக்கின் வசந்தம் மூலம் இலவசமாக வழங்கப்பட்ட மின்சாரம் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீள்குடியேறிய மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், செவ்வாய்க்கிழமை (02) செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மீளக்குடியேறிய மக்களும் நலன்புரி நிலையங்களில் வசிப்பவர்களும், இலவச மின்சாரம் நிறுத்தப்பட்டமையால் பல்வேறு கஸ்டங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தனர்.

இதன்போது பதிலளித்த இணைத்தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா,

தற்போது நாட்டில் 40 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் வரையான இலவச மின் இணைப்புக்கள் இலங்கை மின்சார சபையால் வழங்கப்படவுள்ளன. அந்த இணைப்புக்கள் மூலம் உங்களுக்கும் மின்சாரம் கிடைக்கும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X