2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மீள்குடியேற்றம் தொடர்பாக இறுதி தீர்வு எட்டப்பட்டுள்ளது

Niroshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சண்முகம் தவசீலன்

நாடாளுமன்ற, மாகாண சபை தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும்  இணைந்து ஏற்பாடு செய்த மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல், திங்கட்கிழமை(08) காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக  மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நியாயமான முறையில் மீள்குடியேற்றத்தை செயற்படுத்துவது தொடர்பாகவும் அவர்களுக்குரிய நிலங்களை மீட்டுக்கொடுப்பது தொடர்பாகவும் இறுதித்தீர்வு எட்டப்பட்டது.

மேலும், காடுகள் அழித்தல் தொடர்பாக யாரவது தனிப்பட்ட முறையில் ஈடுபட்டால் அதற்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் வெளிமாவட்டங்களில் வாழ்பவர்களுக்கு அரச காணிகள் வழங்கப்படுவதை நிறுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்புக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இறுதியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X