Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
வலிகாமம் வடக்கில் இன்னமும் விடுவிக்கப்படாத பகுதிகள் மற்றும் அதில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்களின் தொகை தொடர்பான விபரங்களை வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஷெய்ட் ராட் அல் ஹுசைனிடம் கையளித்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (07) விஜயம் மேற்கொண்ட ஆணையாளரிடம் இந்த விபரங்கள் மகஜராகக் கையளிக்கப்பட்டன.
வலிகாமம் வடக்கில் 22 கிராமஅலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 5,342 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். இந்தக் காணிகளில் இருந்து இடம்பெயர்;ந்த 9 ஆயிரத்து 59 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 186 பேர் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் எனவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நலன்புரி முகாம்களில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மக்களின் வாழ்வாதாரமான மீன்பிடி, விவசாயம் என்பனவும் இதற்குள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago