2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

முழங்காவில் பஸ் தரப்பிடம் திறந்து வைக்கப்பட்டது

Niroshini   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாண போக்குவரத்து அமைச்சின் 9 மில்லியன் ரூபாய் செலவில் முழங்காவில் பகுதியில் அமைக்கப்பட்ட பஸ் தரப்பிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் புதன்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முழங்காவில் பகுதியில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் வினைத்திறனானதும் பாதுகாப்பானதுமான போக்குவரத்து சேவையை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்கும் நோக்கோடு இந்த பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட்டது.

இதில், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான அரியரத்தினம் பசுபதி, அனந்தி சசிதரன், வல்லிபுரம் கமலேஸ்வரன், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம், அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், அமைச்சின் பிரதம கணக்காளர் திருமதி அனந்தகிருஷ்ணன், பூநகரி பிரதேச செயலாளர் சி.கிரிஷ்நேந்திரன், வீதி அபிவிருத்தித் திணைக்கள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதம பொறியியலாளர் எஸ்.ஜெகானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X