2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

முழங்காவில் பஸ் நிலையம் விரைவில் மக்கள் பாவனைக்கு

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வடமாகாண போக்குவரத்து அமைச்சின் 8 மில்லியன் ரூபாய் நிதியில் முழங்காவில் பகுதியில் அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தின் கட்டடப் பணிகள் முடிவுற்றுள்ளன.

தேசிய பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகள் உள்ள முழங்காவில் பகுதியில் பஸ் நிலையம் இல்லாத குறை நீண்டகாலம் இருந்தது. இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏ – 32 (யாழ்ப்பாணம் - மன்னார் வீதி) வீதியில் பஸ் தரிப்பிடம் அமைக்கும் பணிகள் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்டன.

இந்த பஸ் தரிப்பிடம் விரைவில் மக்கள் பாவனைக்குத் திறந்து வைக்கப்படவுள்ளதாக வடமாகாண போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X