2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

முழங்காவிலில் தொடரும் காடழிப்பு

Sudharshini   / 2016 ஜூலை 27 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் தொடர்ச்சியாக மரங்கள் அழிக்கப்பட்டு களவாக எடுத்துச் செல்லப்படுவதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கரியாலைநாகபடுவான், தென்னியங்குளம் செல்லும் வீதியில் அமைந்துள்ள காடுகளில் மீள்குடியேற்றத்தின் பின்னர், களவாக மரங்கள் அழிக்கப்பட்டு பிற இடங்களுக்குக் கொண்டுச் செல்லப்படுகின்றன.

இம்மரங்கள் அழிப்புத் தொடர்பாக முழங்காவில் பொலிஸார் கண்டு கொள்வதில்லை எனவும் அழிக்கப்படும் மரங்கள் ஏ-32 வீதி வழியாகவும் பூநகரி சங்குப்பிட்டிப் பாலம் வழியாகவும் யாழ்ப்பாணத்திற்கும் பூநகரி பரந்தன் வீதி வழியாக கிளிநொச்சி மரக்காலைகளுக்கும் கொண்டுச் செல்லப்படுகின்றன.

இவ்வீதிகளில் பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள் உள்ள போதிலும் தொடர்ச்சியாக மரங்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன.

பூநகரிப் பிரதேச செயலகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற கூட்டங்களில், ஒரு விறகுகூட பூநகரிப் பிரதேச செயலர் பிரிவில் இருந்து பிற இடங்களுக்குக் கொண்டு செல்ல முடியாதவாறு இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றுவதாக தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் தொடர்ச்சியாக மரங்கள் அழிக்கப்படுகின்றன.

பூநகரிப் பிரதேச செயலர் பிரிவில் உவர்ப்பரம்பல் அதிகரித்துள்ளதன் காரணமாக மரங்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும் பூநகரியில் வளமான காடுகள் காணப்படுகின்ற முக்கொம்பன், அரசபுரம், கரியாலை நாகபடுவான், ஜெயபுரம், முழங்காவில் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக களவாக மரம் அழித்தல் தொடர்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X