Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம், விக்டோரியா வீதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் 18 வயது இளைஞன் புதன்கிழமை (10) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி வீதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடித் திரிந்த நபரைப் பிடித்து, சோதனையிட்டபோது, அவரது உடமையில் 25 கிராம் எடையுள்ள கஞ்சா கலந்த மாவா பாக்கு கைப்பற்றப்பட்டது.
வண்ணார்பண்ணை வயல்கரை வீதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், ஐந்து சந்திப் பகுதியிலுள்ள கடை ஒன்றில் அதனை வாங்கியதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, விற்பனையாளரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
36 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
8 hours ago
9 hours ago