2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மாவிலி துறைமுகத்தை விடுவிக்குமாறு தீர்மானம் நிறைவேற்றம்

Niroshini   / 2016 மார்ச் 03 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

நெடுந்தீவிலுள்ள பாரம்பரிய துறைமுகமான மாவிலி துறைமுகத்தை கடற்படையினர் விடுவித்து அதனை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை (03) நடைபெற்ற அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கொண்டுவந்த மேற்படி தீர்மானம், அனைவரது ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் பிரதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு, கடற்படைத் தளபதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தற்போது, மேற்படி துறைமுகம் கடற்படையினர் வசமுள்ளது. கடற்படையினர் தங்கள் தேவைக்கு பயன்படுத்துவதுடன், பொதுமக்கள் பயன்படுத்தவும் அனுமதிக்கின்றனர்.

எனினும், வாடைக்காற்று நேரங்களில் தங்கள் படகுகளை மீனவர்கள் மேலே ஏற்றுவதற்கு இந்தத் துறைமுகத்தை பயன்படுத்த கடற்படையினர் அனுமதிப்பில்லை.

முழுமையாக இந்தத் துறைமுகம் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் தாங்கள் சுதந்திரமாக அதனைப் பயன்படுத்தலாம் என கடற்றொழிலாளர் அமைப்புக்கள் கூறின.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X