2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மாவட்டச் செயலாளரின் அலுவலகம் முற்றுகை

Niroshini   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளருடைய அலுவலகம், வடமாகாண சபை உறுப்பினர்களால் இன்று திங்கட்கிழமை (11) முற்றுகையிடப்பட்டது.

நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் நிலஅளவை நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துமாறு கோரியே, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர்கள். எம்.கே.சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், விந்தன் கனகரத்தினம் ஆகியோருடன் காணி உரிமையாளர்களும் இணைந்து முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.

நிலஅளவை பணிகளை முழுமையாக நிறுத்துவதற்கு மேலிடத்தில் கலந்துரையாடி மாவட்டச் செயலாளர் உறுதிமொழி வழங்கும் வரையில் இந்த முற்றுகைப் போராட்டம் தொடரும் என உறுப்பினர்கள் கூறினர்.

இதன்போது, மாவட்டச் செயலாளரை எவரும் சந்திக்க முடியாதவாறும் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாதவாறும் முற்றுகை செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X