2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மகளிர் சக்தி நிவாரண சேவை வேலைத்திட்டம்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கரைச்சிப் பிரதேசத்துக்கான மகளிர் சக்தி நிவாரண சேவை வேலைத்திட்டம், வியாழக்கிழமை (13) காலை 8.30 மணிக்கு, கிளிநொச்சியில் அமைந்துள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான தேசிய நிலையத்தில் நடைபெறவுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் பங்களிப்புடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யு.என்.எச்.சி.ஆர் நிதிப்பங்களிப்புடன் நடைபெறவுள்ள இவ்வேலைத்திட்டத்தில்,  தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளுதல், ஓய்வூதியம் பெறுவதிலுள்ள சிக்கல்கள், பிறப்பு அத்;தாட்சிப்பத்திரம், திருமண அத்;தாட்சிப்பத்திரம் தொழிற்பயிற்சி கற்கை விபரங்கள், சிறுதொழில் முயற்சிகள் உள்ளிட்ட சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த சேவைகள் தொடர்ந்து கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X