2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மண் ஏற்றி சென்றவருக்கு அபராதம்

George   / 2017 மார்ச் 02 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிமதிபத்திரம் இன்றி, உழவு இயந்திரத்தில் கிறேசர் மண் ஏற்றிச் சென்ற சாரதிக்கு, 50ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த மல்லாகம் நீதவான் ரீ.கருணாகரன், மண்னை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதுடன், உழவு இயந்திரத்தினையும் பெட்டியினையும் பதிவு பெற்ற உரிமையாளரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

செவ்வாய்க்கிழமை இரவு, மானிப்பாய் பொலிஸாரின் ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த போது, சண்டிலிப்பாய் பகுதியூடாக கிறேசர் மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் புதன்கிழமை ஆஜர்ப்படுத்திய போது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X