Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை குற்றவாளியாக இனங்கண்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, இருவருக்கும் தலா 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து இன்று புதன்கிழமை (28) தீர்ப்பளித்தார்.
கன்ரர் ரக வாகனங்களில் கடந்த 9ஆம் திகதி மணல் கடத்தலில் ஈடுபட்ட இவ்விருவரும், பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கின் தீர்ப்பு இன்று வாசிக்கப்பட்டது.
குற்றவாளிகளுக்கு அபராதம் விதித்ததுடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மணலை அரசுடமையாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
வாகனங்களைத் தொடர்ந்தும் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
30 minute ago
58 minute ago
1 hours ago