2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மணல் அகழ்வை கட்டுப்படுத்துமாறு மனு

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயனில் தொடர்ச்சியாக நடைபெறும் மணல் அகழ்வை கட்டுப்படுத்தும்படி, கிளிநொச்சி மாவட்டச் செயலாளருக்கு அக்கராயன் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கம், செவ்வாய்க்கிழமை (19) மனுக்கையளித்துள்ளது.

அக்கராயன் ஆற்றுப்பகுதி, அக்கராயன் மேற்குக்கும் அக்கராயன் மத்திக்கும் இடையிலான வயல் நிலங்களில் மீள்குடியேற்றத்துக்குப் பின்னர் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அக்கராயனில் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொண்டிருப்பவர்கள் மணலை பெறுவதில் இடர்களை எதிர்கொண்டுள்ளபோதிலும், நாள்தோறும் டிப்பர்களில் அக்கராயன் பகுதிகளிலிருந்து வெளியிடங்களுக்கு மணல் கொண்டு செல்லப்படுகின்றது.

இந்நிலையில், அக்கராயனில் தொடர்ச்சியாக நடைபெறும் மணல் அகழ்வினால், பெரும் சூழலியல் ஆபத்துகள் எதிர்காலத்தில் ஏற்படும்.

எனவே, மணல் அகழ்வை தடுத்துநிறுத்த நடவடிக்கையெடுக்கும்படி வேண்டுகின்றோம் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X