2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மணல் அகழ்வு தொடர்பாக பொது அமைப்புகள் முறைப்பாடு செய்யவில்லை

Niroshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் நடைபெறும் மணல் அகழ்வு தொடர்பாக அப்பகுதி பொதுஅமைப்புகள் தன்னிடம் முறைப்பாடு செய்வதில்லையென கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் இன்று செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.

அக்கராயன் ஆற்றுப்பகுதி உட்பட பல இடங்களில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெறுவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறும் மணல் அகழ்வுகள் தொடர்பாக மக்கள் மற்றும் பொது அமைப்புகள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில்தான் நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அக்கராயன் பகுதியில் இடம்பெறுகின்ற மணல் அகழ்வு தொடர்பாக பொது அமைப்புகள் தனக்கு தெரிவிக்கவில்லை என்றார்.

அக்கராயன் பகுதியில் நடைபெறும் மணல் அகழ்வுகளில் அக்கராயன் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் ஈடுபடுவதாக பொதுமக்களினால் குற்றம் சாட்டப்படுகிறது.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற சூழல் சட்ட அமுலாக்கல் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, மரங்கள் அழித்தல் என்பவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்டச் செயலாளரினால் முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X