2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மதுபோதையில் பஸ் செலுத்தியவர் கைது

George   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மதுபோதையில் பயணிகள் பஸ் செலுத்திச் சென்ற பஸ் சாரதியை புதன்கிழமை (19) மாலை அச்சுவேலி பகுதியில் கைது செய்துள்ளதாக அச்வேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சுவேலி - யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டார். வீதிச் சோதனையில் நின்றிருந்த பொலிஸார், இவரிடம் சோதனை நடத்தியபோது, மதுபோதையில் இருந்தமை தெரியவந்தது.

கைதான சாரதிக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X