Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 மே 10 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கட்டுப்படுத்த மதுபானசாலைகளுக்கு அருகில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட வேண்டும்" என வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் அமர்வு இன்று (10) கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
“வீதி விபத்துக்கள் அதிகளவில் தற்போது ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. அவற்றுக்கு பிரதான காரணம் மது போதையில் வாகனம் செலுத்துவதாகும்.
மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதன் ஊடாக அவற்றை கட்டுப்படுத்த முடியும். அதற்கு பொலிஸார் மதுபானசாலைகளுக்கு அருகில் கடமையில் ஈடுபட வேண்டும்.
ஆனால் பொலிஸார் அவ்வாறு கடமையில் ஈடுபடுவதில்லை. அதற்கு காரணம் குறித்த மதுபானசாலை உரிமையாளர்களிடம் பொலிஸார் கையூட்டு பெறுகின்றமையே என எனக்கு சிலர் அறிய தந்துள்ளார்கள்.
எனவே அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
இதேவேளை, “வீதி விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு பயிற்சிகள், கருத்தரங்குகள் நடத்தப்படுவதாக” வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
“நாளைய இளைஞர்கள் இன்றைய மாணவர்கள் எனும் ரீதியில் மாணவர்களுக்கு வீதி ஒழுக்குகள், விதிமுறைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு பயற்சிகள், கருத்தரங்குகளை பாடசாலை மட்டத்தில் மேற்கொண்டு வருகின்றோம்.
அதனால் பாடசாலை மாணவர்கள் வீதி ஒழுங்கு, விதிமுறைகளை அறிந்து கொள்வதன் ஊடாக வீதி விபத்துகளை தடுக்க முடியும்” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .