2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மனைவிக்கே இழப்புக்கள் அதிகம்

George   / 2017 மார்ச் 31 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

முக்கொலை குற்றவாளியாக மன்றினால் இனங்காணப்பட்ட நபரினால் அவரது மனைவிக்கே இழப்புக்கள் அதிகம் என, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.

அச்சுவேலி முக்கொலை தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வியாழக்கிழமை (30) யாழ்.மேல் நீதிமன்றில் வழங்கப்பட்டது. அதன் போது எதிரியின் மனைவியிடம் ஏதேனும் மன்றில் தெரிவிக்க விரும்புகின்றீரா? என நீதிபதி வினாவிய போது, “மூன்று கொலைகளை செய்துள்ளார். அவருக்கு நீங்கள் தான் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நீதிபதி, “இந்த வழக்கில் அதிக இழப்புக்களை எதிரியின் மனைவியான இந்த பெண்ணே இழந்துள்ளார். எதிரி கூண்டில் நிற்பவர் இந்த நிமிடம் வரை இந்த பெண்ணுக்கு சட்டரீதியான கணவன். அவரால் தனது தாய், அக்கா, மற்றும் தம்பியை இழந்துள்ளார். இன்று தீர்ப்பினால் எனது கணவனையும் இழக்கின்றார்” என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .